திண்டுக்கல்லில் டாக்டரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அது குறித்த விசாரணை அமலாக்கத்துறை வந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி 3 கோடி கேட்டு தர மறுத்ததால் 51 இலட்சம் கண்டிப்பாக தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து 01.11.23 அன்று நத்தம் சாலையில் 20 லட்சம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு மீதி 31 இலட்சம் பணம் கேட்டு உள்ளார். பிறகு அடுத்து மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத் துறையில் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பினார். திண்டுக்கல் தோமையார் புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி காரில் பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மிரட்டி சென்று கொ ரோடு டோல்கேட் மடக்கி பிடித்து கைது செய்தனர். திவாரி தற்போது மதுரையில் பணியாற்றி வருகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி ஆளும் தரப்பிற்கு எதிராக மணல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்து வரும் நிலையில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.